Breaking News

1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு

      1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒருநாள் 90 நிமிடங்கள் ஆங்கில பயிற்சி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள ஏளூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் கூறியதாவது: 5 மற்றும் 8 ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு வைத்தாலும் 3 ஆண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி பெறுவர். 3 ஆண்டுகளில் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் காலஅவகாசம் வழங்கப்படும். 3 ஆண்டுகளில் மாணவர்கள் தரம்குறித்து கண்காணிக்கப்படும்.

   அரசு பள்ளி தரம் குறைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் கற்றுத்தரும் முறையை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒருநாள் 90 நிமிடங்கள் ஆங்கில பயிற்சி அளிக்கப்படும். 5 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 45 நிமிடங்கள் பயிற்சி அளிக்கப்படும். அதேபோன்று விளையாட்டு, இயல், இசை, நாடகம், பேச்சு, ஓவியப்போட்டி, யோகா, சாலை விதிகளை கற்றுத்தரவும் வாரத்தில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். தேர்வு எழுத 2.30 மணி நேரம் என்பது, 3 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.


No comments