Breaking News

பூஜ்ய மதிப்பெண் எடுத்த பெண்ணை பாராட்டிய கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை

   சரபினா நான்ஸ் உலகின் உயர்மட்ட நிறுவனங்களில் ஒன்றான பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் ஆராய்ச்சி பட்டம் செய்கிறார். 26 வயதான நான்ஸ் வானியற்பியல் சூப்பர்நோவா பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். சரபினா நான்ஸ் என்ற அந்த பெண் அவரது குவாண்டம் இயற்பியல் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றதாகவும் பின்பு தனது துறையை மாற்றி ஆஸ்ட்ரோபிசிக்ஸ் துறையில் தான் சிறந்து விளங்குவதாகவும் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். “தேர்வில் பூஜ்ஜியம் வாங்குவது உங்களது திறனுக்கான மதிப்பீடு அல்ல” என்றும் அந்த மாணவி தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
 
     மாணவியின் இந்த ட்விட்டர் பதிவை தனது பக்கத்தில் பகிர்ந்த கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை, சிறப்பாகச் சொன்னீர்கள். மிகவும் ஊக்கமளிக்கிறது எனப் பாராட்டியுள்ளார்.இந்த பதிவிற்கு சமூகவலைத்தளங்களில் பல்வேறு நபர்களின் பாராட்டை பெற்றுள்ளது.



No comments