Breaking News

ஆசிரியர்கள் ஏதேனும் இடையூறு செய்தல் DIsmiss செய்ய அமைச்சர் அறிவுறுத்தல்

       'பள்ளி கல்வி துறையின் நிர்வாகத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவர்,'' என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்தார்.

      சென்னையில், முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் கூட்டத்தில், அவர் பேசியதாவது: தென்காசி மாவட்டத்துக்கு சென்றபோது, அங்கு ஆய்வு செய்தேன். அப்போது, பள்ளி ஆசிரியரின் வாகனத்தில், கல்வி அதிகாரிகள், பள்ளி ஆய்வுக்கு செல்வதாக அறிந்தேன். அரசின் செலவில் வாகனம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியரின் வாகனத்தில், ஏன் அதிகாரிகள் செல்ல வேண்டும்? அப்படி சென்றால், எப்படி பள்ளியை சரியான ஆய்வு செய்ய முடியும்? இனி, ஆசிரியரின் வாகனத்தில், அதிகாரிகள் செல்லக் கூடாது. முறையான ஆய்வு நடத்தாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். தினமும் குறைந்தபட்சம், இரண்டு பள்ளிகளையாவது ஆய்வு செய்ய வேண்டும். பணியை சரியாக செய்யாத அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் முறையாக நடத்தப்பட்டுள்ளது.

       இந்த இடமாறுதலில் கூட, சிலர் தங்களுக்கு குறிப்பிட்ட இடம் தான் வேண்டும் என, தரையில் உருண்டு புரண்டுஉள்ளனர். இதுபோன்ற அநாகரிக செயலில் ஈடுபடுவோருக்கு, 'மெமோ' மட்டும் போதாது; அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். வேலைக்கு வருவோர், பள்ளிகளை முன்னேற்ற பாடுபட வேண்டும். மாறாக, நிர்வாகத்துக்கு தேவையற்ற இடைஞ்சலையும், கெட்ட பெயரையும், களங்கத்தையும் ஏற்படுத்தக் கூடாது.இவ்வாறு, அவர் எச்சரித்துஉள்ளார்.


No comments