Breaking News

TRB - இடைநிலை , பட்டதாரி , முதுநிலை ஆகிய ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடைபெறும் கால அட்டவணை வெளியீடு

     டெட் தேர்வு மற்றும் ஆசிரியர் காலிப் பணியிட விவரங்களை உள்ளடக்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை டிஆர்பி வெளி யிட்டுள்ளது.

     தமிழக கல்வித் துறையில் ஏற் படும் காலி பணியிடங்கள், ஆசிரி யர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் டிஆர்பி சார்பில் வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணை வெளியிடப்படும். ஆனால், நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு தேர்வுக்கால அட்டவணை வெளியாகவில்லை. 

  இதனால் அதிருப்தியான பட்டதாரிகள் நடப்பு ஆண்டு கால அட்டவணையை வெளியிட கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில்2020-21-ம் கல்வி ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (ww.trb.in.nic.in) நேற்று வெளி யானது. அதில் பல்வேறு பதவி களுக்கான தேர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி 97 வட்டாரக் கல்வி அதிகாரி பதவிக்கான தேர்வு பிப். 15, 16-ம் தேதிகளிலும், 2017-ல் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்ட 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு மே 2, 3-ல் நடைபெறவுள்ளது. 

     இதுதவிர ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) ஜூன் 27, 28-ம் தேதி களில் நடைபெறும். இதற்கான அறிவிப்பு மே 4-ல் வெளியிடப் படும். இதேபோல், 497 முதுநிலை ஆசிரியர், 730 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 572 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு ஜூலை மாதத்தில் வெளியாகும்.

IMG_20200123_092233

No comments