பிப்ரவரி 2020 மாத சம்பளம் எப்போது கிடைக்கும்? - நீங்களே அறிந்துகொள்ளலாம் - Direct Link
பிப்ரவரி 2020 மாத சம்பளம் எப்போது கிடைக்கும்? - நீங்களே அறிந்துகொள்ளலாம் - Direct Link
    அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சம்பளம் பெற்றுத் தர பொறுப்பேற்ற நிறுவனம் போதிய பயிற்சி அளிக்காமல் போனதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் எழுந்தது.
   அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாதாமாதம் பெற்று வரும் சம்பளத்தை அரசிடம் பெற்று அதை நேரடியாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பும் பணியை தனியார் நிறுவனத்திடம் அரசு ஒப்படைத்துள்ளது. ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனம் சம்பளப் பட்டியல் தயாரிக்க புதிய முறையை அறிமுகம் செய்துள்ள நிலையில், அதற்கான பயிற்சியை கருவூல ஊழியர்களுக்கு அளிக்கவில்லை.
   இதனால் சம்பளப் பட்டியல் தயாரிக்க முடியாமல் கருவூல ஊழியர்கள் திணறுகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாதச் சம்பளம் பெற முடியாமல் தற்போது தவிக்கின்ற நிலை ஏற்பட்டது. தற்போது இக்குறைகள் நிவர்த்தி செய்பட்டு உரிய நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
 
 
 
