Breaking News

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற முடியாது மாநிலங்களவையில் மத்திய அரசு பதில்

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற முடியாது மாநிலங்களவையில் மத்திய அரசு பதில்


   அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளதால் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமை யிலான குழு தயாரித்த தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவுஅறிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அதில், சம்ஸ்கிருத மொழிக்கு முக்கியத் துவம் தருதல், பல்கலைக்கழக மானியக் குழு போன்ற உயர் அமைப்புகளை கலைத்துவிட்டு தேசிய கல்வி ஆணையம் அமைத் தல் உள்ளிட்டபல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.



    இதற்கு நாடு முழுதும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் பரவலாக எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து அனைத்து தரப்பின் கருத்துகளைக் கேட்டு வரைவு அறிக்கையில் திருத்தங்கள்மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதனால் விவ காரம் அமைதியானது. இதற்கிடையே நடப்பு ஆண்டு மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.99,300 கோடி ஒதுக்கீடு செய்யப் படுவதாகவும், புதிய கல்விக் கொள்கை விரைவில் அமலுக்குவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



   மேலும், வரைவுக் கொள்கையில் இடம்பெற்ற அம்சங்கள்தான் பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ள தாக தகவல்கள்வெளியாகின. இந்நிலையில் பல்வேறு தரப் பினரும் எதிர்ப்பு தெரிவிப்பதால் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறும் திட்டம் மத்திய அரசுக்கு இருக்கிறதா என்று மாநிலங்களவையில் பாமக எம்.பி. அன்புமணி கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் பதில் அளிக்கும்போது, “புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. வரைவு அறிக்கை தொடர்பாக 2 லட்சத்துக்கும் அதிகமான கருத்து கள் வந்துள்ளன. அதன்படி புதிய கல்விக் கொள்கைக்கு அனைத்து தரப்பின ரிடம் இருந்தும் சாதகமான கருத்து களே பெறப்பட்டுள்ளன. தற்போது கல்விக் கொள்கையை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய கல்விக் கொள்கை விரைவில் அமல்படுத் தப்படும்’’ என்று தெரிவித்தார்.



No comments