Breaking News

மின் கட்டண சலுகை ஏப்ரல் 14 வரை நீட்டிப்பு

மின் கட்டண சலுகை ஏப்ரல் 14 வரை நீட்டிப்பு


    ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து, ஏப்ரல், 14 வரை, நுகர்வோரிடம் இருந்து, முந்தைய மின் கட்டணத்தை வசூலிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.


    தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவி வருவதால், வீடுகள், கடைகளில், மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணி நடக்கவில்லை. இதனால், '22ம் தேதி முதல், 31ம் தேதி வரை, 'மீட்டர் ரீடிங்' எடுக்க முடியாத சமயத்தில், முந்தைய பிப்ரவரி - ஜனவரி மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம்' என, மின் வாரியம் அறிவித்தது.அந்த கட்டணத்தையும், நேரில் வருவதை தவிர்த்து, இணையதளம், மொபைல் போன் செயலி போன்ற, 'டிஜிட்டல்' முறையில் செலுத்துமாறு, மின் நுகர்வோர் அறிவுறுத்தப்பட்டனர். தற்போது, ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்குஅமலில் இருக்கும்.


   இதையடுத்து, ஏப்., 14ம் தேதி வரை, மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோரையும், முந்தைய கட்டணத்தை செலுத்துமாறு அறிவுறுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும், ஏப்., 14 வரை, மின் கட்டணம் செலுத்தாத வீடுகளில், மின் வினியோகம் துண்டிக்கப்படாது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.



No comments