Breaking News

5, 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கொண்டுவந்தது சரிதான்! - சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி தெரிவிப்பு

5, 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கொண்டுவந்தது சரிதான்! - சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி தெரிவிப்பு

   5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கொண்டுவந்ததில் தவறு இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யாமல், போதுமான ஆசிரியர்கள் நியமிக்காமல் எப்படி பொதுத் தேர்வு நடத்தப் போகின்றீர்கள், தேர்ச்சி பெறாத மாணவர்கள் நிலை என்ன ஆகும், அவர்கள் திரும்ப அதே வகுப்பில் படிக்க அனுமதிப்பீர்களா அல்லது சிறப்புத் தேர்வு எழுதித்தான் மீண்டும் பள்ளிக்கு வர முடியுமா? ஏற்கனவே இடைநிற்றல் அதிகமாக உள்ள நிலையில், இந்த பொதுத் தேர்வால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்காதா என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.


  ஆனால் எதற்கும் பதில் சொல்லாமல் பொதுத் தேர்வு நடத்தியே தீருவது என்று தமிழக அரசு உறுதியாக இருந்தது. பொது மக்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் அழுத்தத்தை சமாளித்த தமிழக அரசால், உயர் நீதிமன்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை. வழக்கு நடந்துவந்த நிலையில், 5 மற்றும் 8ம் வகுப்புக்கு அறிவிக்கப்பட்ட பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

   இந்த நிலையில் இன்று இது பற்றி தமிழக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அப்போது அவர், 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு கொண்டு வந்ததில் தவறில்லை. 5 மற்றும் 8ம் வகுப்பில் பொதுத் தேர்வு எழுதினால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும்போது பயம் இருக்காது" என்றார்.


No comments