Breaking News

தேர்வை நிறுத்தி வைக்கவும் இல்லை என்றால் வகுப்பறையில் பயிற்சி வழங்க அனுமதி கொடுக்கவும் - ஆசிரியர்கள் கோரிக்கை

தேர்வை நிறுத்தி வைக்கவும் இல்லை என்றால் வகுப்பறையில் பயிற்சி வழங்க அனுமதி கொடுக்கவும் - ஆசிரியர்கள் கோரிக்கை

கொரோனா வைரஸ் பாரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூடவும் , 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடைபெறும் எனவும் அரசு உத்தரவிட்டது.


இந்நிலையில் மாணவர்களுக்கு மட்டுமே விடுப்பு ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து கல்வி தொடர்பான பணிகளை செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

அதனால் மாணவர்கள் இன்றி ஆசிரியர்கள் மட்டும் தினமும் பள்ளி வந்து செல்கின்றனர்.


தேர்வு நடைபெறும் நேரத்தில் பயிற்சி இன்றி மாணவர்கள் எவ்வாறு தேர்வை எதிர்கொள்வார்கள் என்ற கவலையில் ஆசிரியர் ஒருவரது பதிவு இது!

 ஒவ்வொரு ஆசிரியருக்கும் தன்னுடைய உயிரை விட அவர்களுடைய மாணவர்கள் நல்ல மார்க் எடுத்து நல்ல நிலையில் வருவது தான் விருப்பம் அதை தான் விரும்புவார்கள் ஆனால் 11th 12 மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுத சென்றால் எப்படி மார்க் வரும் அதும் accountancy தேர்வு என்பது ஆசிரியர் துணை இல்லாமல் கண்டிப்பா எழுதவே முடியாது இதை கவனத்தில் கொண்டு ஒன்று தேர்வை நிறுத்தி வைக்கவும் இல்லை என்றால் வகுப்பறையில் பயிற்சி வழங்க அனுமதி கொடுக்கவும் இதை அரசு கவனத்தில் எடுக்குமா.


No comments