Breaking News

கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு - ஆறு மாவட்டங்களின் தகவல்

கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு - ஆறு மாவட்டங்களின் தகவல்

மதுரை, திண்டுக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
மதுரை மாவட்ட விபரங்களை அறிய

திண்டுக்கல் மாவட்ட விபரங்களை அறிய
சேலம் மாவட்ட விபரங்களை அறிய

கடலூர் மாவட்ட விபரங்களை அறிய
பெரம்பலூர் மாவட்ட விபரங்களை அறிய

அரியலூர் மாவட்ட விபரங்களை அறிய
தெரிவு செய்யப்படும் முறை
அ) விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விலும் நேர்முகத் தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசாணைப்படியான இட ஒதுக்கீடு , இனச் சுழற்சி முறை , ஆகியவற்றின் அடிப்படையில் கணினி மூலம் சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள் .

ஆ) விண்ணப்பதாரர்களின் தகுதி குறித்த அனைத்து சான்றிதழ்களையும் , ஆதிதிராவிடர் , அருந்ததியார் , பழங்குடியினர் , மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ( முஸ்லிம் ) , ஆதரவற்ற விதவைகள் , மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவுகளில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் அனைத்துச் சான்றிதழ்களையும் சரிபார்த்த பின்னரே தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும் .


இ) மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் தேர்வு செய்யப்படும் நபர்களுக்குத் தெரிவு மற்றும் சங்கத்திற்கு ஒதுக்கீடு ஆணை ( selection and allotment order ) மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் வழங்கப்படும் . அவர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட சங்கத்தின் தகைமை வாய்ந்த அலுவலரால் பணியமர்வு ஆணை ( appointment order ) வழங்கப்படும் .

ஈ) முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுதாரர்களுக்கு முன்னாள் இராணுவத்தினருக்கான இட ஒதுக்கீடு முறை பொருந்தாது .

உ) தெரிவு செய்யப்படும் மாற்றுத் திறனாளிகள் , தங்களது குறைபாடு , தாங்கள் தெரிவு செய்யப்படும் பதவிகளுக்குரிய பொறுப்புகளை முழுத்திறனுடன் நிறைவேற்றுவதற்குத் தடையாக இருக்காது என்பதற்கான சான்றிதழை மருத்துவக் குழுவிடம் பெற்றுச் சமர்பிக்க வேண்டும்.



No comments