Breaking News

வேளாண் படிப்புக்கு நுழைவு தேர்வு அறிவிப்பு

வேளாண் படிப்புக்கு நுழைவு தேர்வு அறிவிப்பு


    வேளாண் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான, அகில இந்திய வேளாண் நுழைவு தேர்வு, ஜூன், 1ல் நடத்தப்பட உள்ளது.தேசிய அளவில் அங்கீகாரம் பெற்று நடத்தப்படும் வேளாண்மைகல்லுாரிகள், மீன்வள கல்லுாரிகள் உள்ளிட்டவற்றில், இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்த, அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.


     இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் சார்பில், இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு, ஜூன், 1ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வுக்கு, தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில்,ஆன்லைன் வழியில் விண்ணப்பப் பதிவு துவங்கியுள்ளது; மார்ச், 31 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.


    தேர்வில் தேர்ச்சி பெறுவோர், பி.எஸ்சி., - பி.வி.எஸ்சி., - பி.டெக்., - எம்.எஸ்சி., உள்ளிட்ட படிப்புகளில், வேளாண்மை, பண்ணை பராமரிப்பு, மீன்வளம் போன்ற பாடங்களை படிக்கலாம். தேர்வுக்கான கூடுதல் விபரங்களை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின், https://icar.nta.nic.in என்ற தேர்வு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments