Breaking News

பொதுத் தேர்வு அறைகளில் நாற்காலி போட தடை

பொதுத் தேர்வு அறைகளில் நாற்காலி போட தடை

பொதுத் தேர்வு அறைகளில், சில ஆசிரியர்கள் துாங்குவதை தடுக்க, நாற்காலி போட தடை விதிக்கப்பட்டுள்ளது.


            பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 தேர்வுகள் நடந்து வருகின்றன. வரும், 27ம் தேதி, 10ம் வகுப்பு பொது தேர்வு துவங்க உள்ளது. தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுப்பதற்காக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், தேர்வு கண்காணிப்பு ஆசிரியர்களில் சிலர், நாற்காலியில் அமர்ந்து துாங்கி விடுவதாக, புகார்கள் எழுந்துள்ளன. பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள், இதைக் கண்டு பிடித்துள்ளனர். எனவே, தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, நாற்காலி, மேஜை வழங்க வேண்டாம் என, தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


 இதற்கிடையில், திருவள்ளூர் மாவட்டத்தில்,முதன்மை கல்விஅதிகாரிநியமித்த தனிப் படையினர், செங்குன்றத்தில் உள்ளதனியார் மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்துக்கு சென்றனர். அப்போது, அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த ஆசிரியர் ஒருவர், நாற்காலி இல்லாததால், மாணவர்கள் தேர்வு எழுதும்பெஞ்சில், இரு மாணவர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்ததை பார்த்தனர்.

         இப்படி அமர்ந்திருந்தால், தேர்வு எழுதுவதில், மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக இடையூறு ஏற்படும் என, அறிவுறுத்தி உள்ளனர். இதனால், தனிப்படையினருக்கும், ஆசிரியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, முதன்மை கல்வி அதிகாரி வரை, விசாரணை சென்றுள்ளது. அதேபோல், சில தேர்வு மையங்களில், மாணவர்கள் தேர்வு எழுதும் போது, அருகில் உள்ள இன்னொரு தேர்வறை கண்காணிப்பாளருடன், கதை பேசுவதாகவும், சில ஆசிரியைகள் மீது புகார்கள் வந்துள்ளன.


No comments