Breaking News

அனைத்து தேர்வுகளையும் ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்கி மே மத்தியில் முடிக்க திட்டம்

அனைத்து தேர்வுகளையும் ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்கி மே மத்தியில் முடிக்க திட்டம்


கொரோனா பிரச்சனை காரணமாக சி.பி.எஸ்.இ., மத்திய திறந்தவெளி கல்வி அமைப்புகள் மற்றும் பல்வேறு தேர்வு வாரிய பள்ளி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஏப்ரல் 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் உடனடியாக தேர்வு நடத்தும் வாய்ப்பு இல்லை.
எனவே ஊரடங்கு முடிந்ததும் தேர்வு நடத்துவது பற்றி ஆய்வு செய்ய உள்ளனர். இதுபற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-தள்ளி வைக்கப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்கி மே மத்தியில் முடிக்கலாம் என திட்டமிட்டு இருக்கிறோம். 14-ந்தேதி ஊரடங்கு நிறைவு பெற்றதும் இதுபற்றி அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்துவோம்.


அதில் முடிவு எடுக்கப்பட்டு தேர்வு தேதி அறிவிக்கப்படும். ஏற்கனவே நடந்த தேர்வுகளுக்கான பரீட்சை பேப்பர் திருத்தும் பணி நின்றுவிட்டது. அவையும் தொடங்கப்படும். அதன்பிறகு தேர்வு நடத்தப்படும் விடைத்தாள்களையும் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு ஜூன் மாதத்தில் தேர்வு முடிவு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments