Breaking News

தெரிந்து கொள்வோம்...வரலாற்றில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

தெரிந்து கொள்வோம்...வரலாற்றில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்
முக்கிய நிகழ்வுகள்

👉 1917ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி இந்திய அரசியல் தலைவர்களில் ஒருவரான தாதாபாய் நௌரோஜி மறைந்தார்.

📞 1937ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி உலகின் முதலாவது அவசரத் தொலைப்பேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப் பட்டது.

👉 1919ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சான் வில்லியம் ஸ்ட்ரட் மறைந்தார்.

👉 1972ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி ஒருங்கிணைக்கப் பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி (leap second) அதிகரிக்கப்பட்டது.

மைக் டைசன்

💪 உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் 1966ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் பிறந்தார்.

💪 இவர் 1982ஆம் ஆண்டு ஜூனியர் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். தொடர்ச்சியாக குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்ட மைக் டைசன் தனது முதல் 28 போட்டிகளில் 26-ல் வென்றார். இவர் உலக ஹெவிவெய்ட்(heavy weight) சாம்பியன் பட்டம் வென்று 'உலகின் இளம் சாம்பியன்' என்ற பெருமையை பெற்றார்.


💪 ஒரே நேரத்தில் உலக பாக்ஸிங் அசோசியேஷன், உலக பாக்ஸிங் கவுன்சில், உலக பாக்ஸிங் பெடரேஷன் என 3 அமைப்புகளின் முக்கிய பட்டங்களையும் வென்ற முதல் ஹெவிவெய்ட் சாம்பியன் என்ற பெருமையை பெற்றார். இவர் 2006ஆம் ஆண்டு குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

No comments