Breaking News

நோய் எதிர்ப்பு சக்தி தரும் இஞ்சி ஊறுகாய் தயாரிப்பது எப்படி

நோய் எதிர்ப்பு சக்தி தரும் இஞ்சி ஊறுகாய் தயாரிப்பது எப்படி
கரோனா வைரஸைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் கரோனா பாதிப்பில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். கரோனாவை வெல்ல நோய் எதிர்ப்பு ஆற்றல் மிக அவசியம். சத்தான உணவைச் சரிவிகிதத்தில் சாப்பிடுவதுடன் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

“இஞ்சி உணவாகவும் மருந்தாகவும் செயல்படக்கூடியது. வாந்தி, தலைசுற்றல் போன்றவற்tறைக் குறைக்கும், செரிமானத்தைத் தூண்டும், சளி, காய்ச்சல், இருமலுக்கு நல்லது” என்கிறார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன். இஞ்சியைப் பயன்படுத்திச் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் அவர் பகிர்ந்துகொள்கிறார்.

இஞ்சி ஊறுகாய் என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய இளம் இஞ்சி - 100 கிராம்

நறுக்கிய கேரட் - 1

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு தாளிக்க

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1

எப்படிச் செய்வது?

தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிய இஞ்சி, கேரட், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அதில் எலுமிச்சைச் சாற்றைச் சேருங்கள். தாளிக்கும் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, பெருங்காயம் இரண்டையும் போட்டுத் தாளித்து இஞ்சிக் கலவையில் கொட்டிக் கிளறுங்கள். இதைத் தயிர்ச்சோற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

No comments