Breaking News

நமக்கு தெரியாத சில சுவாரசிய தகவல்கள் தெரிந்து கொள்வோம்

நமக்கு தெரியாத சில சுவாரசிய தகவல்கள் தெரிந்து கொள்வோம்
டாக்டர் பி.சி.ராய்

🌟 மருத்துவர்களின் சேவைகளை போற்றும் வகையில் டாக்டர் பி.சி.ராய் பிறந்த மற்றும் மறைந்த நாளான ஜூலை 1ஆம் தேதியை தேசிய மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப் படுகிறது. மருத்துவர் பி.சி.ராய் 1882ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பீகாரில் உள்ள பான்கிபூரில் பிறந்தார்.

🌟 பி.சி.ராய், மேற்கு வங்காளத்தின் 2வது முதல்வராக பதவி வகித்தார். இவர் சுதந்திர போராட்ட வீரராக மட்டுமில்லாமல், சிறந்த மருத்துவராகவும் சேவை புரிந்துள்ளார்.

🌟 இவருக்கு 1961ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது நினைவை போற்றும் வகையில் மருத்துவம், அறிவியல், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு பி.சி.ராய் விருது வழங்கப்படுகிறது. இவர் 1962ஆம் ஆண்டு மறைந்தார்.

👉 2002ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.

👉 1979ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சோனி நிறுவனத்தின் வாக்மன் அறிமுகம் செய்யப்பட்டது.

No comments