Breaking News

வரலாற்றில் இன்று என்ன நாள் என்ன நடந்தது தெரிந்து கொள்வோம்...

வரலாற்றில் இன்று என்ன நாள் என்ன நடந்தது தெரிந்து கொள்வோம்...
உலக ஜூனோசிஸ் தினம்

🐱 ஜூனோசிஸ் என்பது விலங்குகளுக்கு ஏற்படும் வியாதி. இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது.

🐱 காட்டு விலங்குகள், வீட்டில் வளர்க்கும் பூனை, நாய், எலி மூலமும் மனிதர்களுக்குப் பரவுகின்றன. சில ஆட்கொல்லி நோய்களும் விலங்குகள் மூலம் பரவுகின்றன.

🐱 விலங்குகள் மூலம் பரவும் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஜூலை 6ஆம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பரிதிமாற் கலைஞர்

✍ தமிழுக்கு தொண்டாற்றிய பரிதிமாற் கலைஞர் 1870ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி.

✍ இவர் தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவர் ஆவார். இளம்வயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

✍ தமிழ் அறிவும், ஆர்வமும் கொண்ட மாணவர்களுக்கு தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாஸ்திர நூல்களைக் கற்பித்தார். சென்னை செந்தமிழுரைச் சங்கத்தை நிறுவினார்.

✍ இவர் சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தனது வடமொழிப் பெயரை பரிதிமாற் கலைஞர் என தமிழில் மாற்றிக்கொண்டார். இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

✍ திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்ட பரிதிமாற் கலைஞர் 1903ஆம் ஆண்டு வயதில் மறைந்தார்.

No comments