Breaking News

அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்

அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர் அம்மா சேலையில் தூக்கில் தொங்கிய பரிதாபம்

  வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொட்டராமடுகு என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வரும் தம்பதி பாலாஜி-சுமதி.. இவர்களின் மகன் அசோக்குமாருக்கு 18 வயதாகிறது.. குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று தமிழகம் முழுவதும் தேர்வு முடிவுகள் வெளியானது... இதில் அசோக்குமார் பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.. அரசு பள்ளியில் இவர்தான் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்துதள்ளார். ஆனாலும் எதிர்பார்த்த மார்க் இவருக்கு கிடைக்கவில்லை போலும்.. மார்க் குறைந்துவிட்டதால், ரிசல்ட் வந்ததில் இருந்தே கவலையில் இருந்தார். ஒருகட்டத்தால், இதை தாங்கி கொள்ள முடியாத அவர், வீட்டுக்கு பக்கத்தில் இருந்த மாந்தோப்பிற்கு சென்று, சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்... 



   தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அசோக்குமார் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்... பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகன் முதல் மாணவனாக வந்ததை நினைத்து பெற்றோரும், பள்ளியிலும் நேற்றெல்லாம் சந்தோஷமாக இருந்தனர்.. இந்நிலையில் சடலத்தை கண்டு கட்டிப்பிடித்துகொண்டு அழுதது காண்போரை நிலைகுலைய வைத்தது.. அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டது உடனடியாக ஸ்கூலுக்கு தெரியப்படுத்தப்பட்டது.. பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் என எல்லாருமே திரண்டு அசோக்குமார் வீட்டுக்கு வந்து கதறி அழுதனர்.. உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 



   ஃபெயில் ஆனவர்களும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.. முதல் மார்க் எடுப்பவர்களும் இமப்படி தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதை ஏற்கவே முடியவில்லை.. பிள்ளைகளுக்கு தீவிரமான கவுன்சிலிங் போன்றவைகளை வழங்க பள்ளிகள், அரசு நடவடிக்கை எடுத்தால் நல்லா இருக்கும்.

No comments