Breaking News

வெங்காயம் கண்ணில் நீர் வரக் காரணம்

வெங்காயம் கண்ணில் நீர் வரக் காரணம்
வெங்காயம் நறுக்கும் போது அதன் இதழ்களில் காணப்படும் ஆலினேஸ் என்ற நொதி அந்த இதழ்களில் காணப்படும் புரோப்பினிசிஸ்டைன் சல்பாக்சைடு என்ற பொருள் மீது வினை புரிந்து புரோப்பின் சல்பினிக் அமிலமாக மாறுகிறது. இந்த அமிலம் எளிதில் ஆவியாகி காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து உறுத்துகிறது. அதன் விளைவாக கண்ணீர் சுரப்பியிலிருந்து நீர் சுரந்து வெளியேறுகிறது.
வெங்காயத்தில் விட்டமின் சி உள்ளது.

பச்சை வெங்காயத்தின் நன்மைகள் வெங்காயத்தை சிறிதளவு தினமும் பச்சையாக சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைகின்றது. வெங்காயத்தில் உள்ள சல்பர் சத்தானது ரத்தத்தை சுத்தம் செய்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது. வெங்காயத்தில் இருக்கும், அலர்ஜியை எதிர்க்கும் தன்மை சுவாசக் குழாயை சுத்தப்படுத்தி ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து நம்மை காக்கிறது.

No comments