Breaking News

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்க முடிவு

தமிழகத்தில் இயங்கும் அரசு , அரசு உதவிமற்றும் தனியார் பொறி யியல் கல்லூரியில் உள்ள இடங் கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப் பட்டு வருகின்றன .
தற்போது கரோனா ஊரடங்கால் கலந்தாய்வு தாமதமாகி உள்ளது . இந்நிலையில் , கலந்தாய்வை நடத்துவது குறித்து உயர் கல்வித் துறையின் கவுன்சில் கூட்டு டம் கடந்த
29 - ம் தேதி அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்தது . இதில் , உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா , தொழில்நுட்டம் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் விவேகானந்தன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் . இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு :

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு விண்ணப்பத் தேதியை ஜூலை 2 - வது வாரத்தில் அறிவிக்க வேண்டும் .

செப் .16 - ல் வகுப்புகள் தொடக்கம் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டு , ஆகஸ்ட் 30 - க்குள் முதல் சுற்று கலந்தாய்வையும் , செப் . 10 - க்குள் 2 - ம் சுற்று கலந்தாய்வையும் முடிக்க வேண்டும் . நிரம்பாத இடங் களுக்கு செப் .15 - க்குள் கலந் தாய்வு நடத்தி முடிக்கவேண்டும் . செப் .16 - ம் தேதி புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங் கப்படவேண்டும் .
இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க் கையை ஆகஸ்ட்டில் முடிக்க வேண்டும் என்று பல்கலை . மானி யக் குழு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது .

No comments