Breaking News

உடல் வலி, அசதியா? இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க

உடல் வலி, அசதியா? இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க
நிவாரண உணவுகள்:
லகுவான கஞ்சி வகைகளில் சுக்கு சேர்த்துக் கொடுக்கலாம். தூங்குவதற்கு முன் தலைக்கும், காலுக்கும் கொம்பரக்கு எண்ணெய் தேய்த்த பின் தூங்கலாம். தலையில் எண்ணெய் ஊற்றும் தாரை சிகிச்சை செய்ய வேண்டும். சிற்றரத்தை, குறுந்தட்டி, நாயுருவி, அஸ்வகந்தா போன்ற கஷாயங்களைக் கொடுத்து அலுப்பைக் குறைக்க வேண்டும். தாளிசபத்திரி மாத்திரை பசியைக் குறைத்துக் காய்ச்சலைக் குறைக்கும்.

மனதுக்கு வல்லாரை, சங்குபுஷ்பி, கல்யாணப் பூசணி, வாலுலுவை, நீர்பிரம்மி, வெண்தாமரை போன்ற சூரணங்களைக் கொடுக்க வேண்டும். மிகை அசதி நோய் உள்ளவர்களுடன் மனம் விட்டுப் பேச வேண்டும். மென்மையான உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
மருந்துகள்

மிகை அசதியால் சோர்வாக இருப்பவர்கள் மெதுவாக வேலை செய்ய வேண்டும். வேலையையும், ஒய்வையும், தூக்கத்தையும் முறைப்படுத்தவேண்டும். ஒரு பெரிய வேலையை, சிறிது சிறிதாகப் பிரித்துச் செய்வதற்குப் பழக வேண்டும். யோகா, தியானம் செய்ய வேண்டும். ஆழமாக மூச்சை இழுத்து வெளிவிடுவது மிகவும் நல்லது.

மிகை அசதி உள்ளவர்களுக்குப் பலா அஸ்வகந்தா லாக்ஷாதி தைலம், தான்வந்தரத் தைலம் போன்ற எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். தசமூலத்தைப் பாலில் காய்ச்சி அந்தப் பாலில் தாரை (ஊற்றுதல்) செய்தால் நல்ல பலன் கிடைக்கும். வஸ்தி சிகிச்சை (enema) அற்புதமான பலனைத் தரும். ஆறு மாதத்தில் இந்த நோயைக் குணப்படுத்த முடியும். சிலருக்குச் சோகம், அவர்களுடைய குடும்பச் சூழ்நிலையால் ஏற்படுகிறது. மனம் விட்டுப் பேசுவதால், இதைப் படிபடியாகக் குறைக்க முடியும்.
எளிமையான மருந்துகள்
# கிராம்பு, நிலவேம்பைச் சம அளவு எடுத்துத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி அந்தக் கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் அசதி குறையும்.

# ஒரு டம்ளர் அன்னாசிப் பழச் சாற்றுடன் மிளகுத் தூள் சேர்த்துத் தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும்.

# அக்கரகார சூரணத்தில் சம அளவு உப்பு சேர்த்து அரைத்து, அத்துடன் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து, வெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும்.

# முருங்கை ஈர்க்கைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் கஷாயம் செய்து குடிக்க அசதி நீங்கும்.

# மிளகை நெய்யில் வறுத்துத் தூள் செய்து வெல்லம், நெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு சாப்பிட்டுவர உடல் சோர்வு குறையும்

# வெங்காயத்தை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டுவர அசதி குறையும்.


# புதினாவைச் சுத்தம் செய்து காயவைத்து இடித்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். அந்தப் பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் கஷாயம் செய்து சாப்பிட்டுவந்தால் உடலில் அசதி குறையும்.

# கேரட்டைச் சுத்தம் செய்து அரைத்துச் சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தச் சாற்றில் பத்து மிளகு, தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் உடல் அசதி குறையும்.

# மகிழம்பூ, ரோஜாப்பூ, தாமரைப்பூ, தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றில் வகைக்கு 100 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றுடன் சுக்கு, ஏலக்காய் தலா 10 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் இடித்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். அந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி வீதம் இரண்டு வேளை சாப்பிட்டுவந்தால், உடல் சோர்வு குறையும்.

# செங்கரும்புச் சாறு 100 மி.லி., எலுமிச்சைச் சாறு 30 மி.லி. ஆகியவற்றுடன் சீரகப் பொடியைக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் அசதி குறையும்.

# கோதுமையைத் தண்ணீர் விட்டு இரவில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் கோதுமை முளை விட்டு இருக்கும். அதை வெயிலில் உலர்த்திப் பொன்னிறமாக வறுத்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். அந்தப் பொடியுடன் அதிமதுரம், நாட்டுச் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிட உடல் சோர்வு நீங்கும்.

# இந்துப்பு, மிளகு, பொடுதலைக் காய், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் இட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை ஒரு அவுன்ஸ் வீதம் அருந்திவந்தால் உடல் அசதி குறையும்.

# கோபுரம் தாங்கிச் செடி வேரை நிழலில் உலர்த்தி இடித்துப் பொடி செய்து கற்கண்டுடன் சேர்த்துக் காலை, மாலை நெய்யில் கலந்து சாப்பிட்டுவந்தால் உடல் சோர்வு குறையும்

No comments