Breaking News

வரலாற்றில் இன்று July-30

வரலாற்றில் இன்று-July-30

முக்கிய நிகழ்வுகள் :-

👉 1863ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி மாடல் டி காரை உருவாக்கிய ஹென்றி ஃபோர்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் பிறந்தார்.


👉 1930ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி முதலாவது கால்பந்து உலகக் கோப்பையை உருகுவே வென்றது.

முக்கிய தினம் :-

ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம்

👉 ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30ஆம் தேதி ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆட்கடத்தல் என்பது மனித உரிமை மீறல் மற்றும் மிகக் கொடுமையானதாகும். உலகளவில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக்கொண்டே தான் இருக்கின்றன.

👉 இதனைத் தடுத்திட ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டு, 2014ஆம் ஆண்டுமுதல் இத்தினத்தை கடைபிடிக்குமாறு அறிவித்தது.

பிறந்த நாள் :-

முத்துலட்சுமி ரெட்டி

👉 இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகப் போராளியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1886ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார்.


👉 அந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளையும் மீறி ஆண்கள் கல்லூரியில் ஒரே பெண்ணாக சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, மாநிலத்திலேயே முதல் மாணவியாக வெற்றி பெற்றார்.

👉 இந்திய மாதர் சங்கத்தை தொடங்கி வைத்தவர் இவர்தான். மேலும், இவர் சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் ஆவார். மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவர்தான்.

👉 தற்போது உள்ள சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இவரது முயற்சியால் தான் ஆரம்பிக்கப்பட்டது. இவர் பத்மபூஷண் விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

👉 எதையும் தடைகற்களாக எடுத்துக்கொள்ளாமல், படிகற்களாக எடுத்துக்கொண்டு முன்னேறிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தனது 81வது வயதில் (1968) மறைந்தார்.


No comments