Breaking News

தினம் ஒரு தகவல்........Link உள்ளே சென்று படிக்கவும்

தினம் ஒரு தகவல்........Link உள்ளே சென்று படிக்கவும்
முக்கிய நிகழ்வுகள்
👉 1902ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவரான சுவாமி விவேகானந்தர் மறைந்தார்.

👉 அமெரிக்காவின் சுதந்திர தினம் : 1776ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4ஆம் தேதி ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து அமெரிக்கா விடுதலை அடைந்தது.

👉 1934ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி ரேடியத்தை கண்டுபிடித்த மேரி கியூரி மறைந்தார்.

 குல்சாரிலால் நந்தா

🏁 விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய குடியரசின் முன்னாள் பிரதமருமான குல்சாரிலால் நந்தா 1898ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி பஞ்சாப் மாகாணத்திலுள்ள சியால்கோட் என்னுமிடத்தில் பிறந்தார்.

🏁 இவர் இரண்டு முறை தலா 13 நாட்கள் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்துள்ளார். 1964ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு இறந்தபொழுது முதல் முறையும், 1966ஆம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.

🏁 இவர் காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்கும் காந்தியவாதி ஆவார். இந்திய அரசு இவருக்கு 1997ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவித்தது.

🏁 இந்திய அரசியல்வாதியும், தொழிலாளர் சிக்கலில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞருமான இவர் 1998ஆம் ஆண்டு மறைந்தார்.

No comments