Breaking News

மூடப்பட்ட பள்ளிகளால் குழந்தைகளிடம் உளவியல் ரீதியான பாதிப்பு

மூடப்பட்ட பள்ளிகளால் குழந்தைகளிடம் உளவியல் ரீதியான பாதிப்பு
மூடப்பட்ட பள்ளிகள், விளையாட அனுமதி மறுப்பு, ஆன்லைன் வகுப்பு என புரியாத புதிய அனுபவங்கள், குழந்தைகளிடம் உளவியல் ரீதியான பாதிப்புகளை கட்டாயம் ஏற்படுத்தும். 

பெற்றோர் மிகவும் கவனமுடன், குழந்தைகளை கையாள வேண்டும்,'' என அறிவுறுத்துகிறார், வளர்பருவ குழந்தைகள் நல மருத்துவர் மல்லிகை செல்வராஜ். 'டிவி', கம்ப்யூட்டர், மொபைல்போன்களை, இன்று குழந்தைகளால் தவிர்க்க முடியவில்லை. 

இந்த திரைநேரத்துக்கு ஏதாவது வரையறைகள் உண்டா ?திரைநேரம் என்பது, இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கூடாது. 2 முதல் 5 வயதுடைய குழந்தைகள், ஒரு மணி நேரம் பார்க்கலாம். 5 -10 வயது குழந்தைகள் அதிகபட்சம், 3 மணி நேரமும், 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள், அதிகபட்சம் 4 மணி நேரம் மட்டுமே பார்க்கலாம். 

அதுவும், திரையின் வெளிச்சத்தை குறைத்து வைக்க வேண்டும்.அதிக நேரம் இந்த எலக்டிரானிக் உபகரணங்களை பார்ப்பதால், என்ன பாதிப்பு ஏற்படும்?அதிக நேரம் 'டிவி', மொபைல்போன் பார்த்தபடி உண்பதால், வயிறு நிரம்பி விட்டதை மூளையால் உணர முடியாது. 

இதனால் அதிகமாக உண்பர். உடல் பருமன் ஏற்படும். துாக்கமின்மை, அது சார்ந்த மன உளைச்சல்கள், கண் பாதிப்பு, காது பாதிப்பு என, பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.

அப்படியானால், ஆன்லைன் வகுப்புகளால் பாதிப்பு வருமா?ஆன்லைன் வகுப்புகளும், திரைநேரத்தின் ஒரு பகுதிதான். டெஸ்க்டாப், லேப்டாப் சற்று பயனுள்ளதாக இருக்கும். முடியாதவர்கள் ஐ-பேட், பெரிய திரையுள்ள போன் பயன்படுத்தலாம். 

அமெரிக்காவின் ஓர் ஆய்வின் படி மொபைல்போன், அதிக நேரம் கேம் விளையாடும் குழந்தைகளுக்கு, மூளையின் தடிமன் குறைவது தெரியவந்துள்ளது.கண் பாதிப்புகளை தவிர்க்க என்ன செய்வது?20 நிமிடத்துக்கு ஒரு முறை, கண்களை சிமிட்டுதல், சுழற்றுதல், மேலும் கீழும் பார்த்தல் ஆகிய பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகளின் போது, குழந்தைகளை சுதந்திரமாக விடவேண்டும். அருகில் இருந்து, அழுத்தம் தரக்கூடாது. ஆசிரியர்களை குறை கூறக்கூடாது. இது, குழந்தைகளிடம் தேவையற்ற தாக்கங்களை ஏற்படுத்தும்.

ஊரடங்கில் குழந்தைகளை சமாளிக்க பெற்றோருக்கு கூறும் அறிவுரை?முதலில் குழந்தைகள் காலையில் எழுவது, குளிப்பது, உணவு எடுப்பது, உறக்கம், விளையாட்டு அனைத்திற்கும் ஓர் அட்டவணை போட்டு, சுயஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். 

அவர்களுடன் உடற்பயிற்சி செய்யலாம். பாடலாம், ஆடலாம், சிறிய விளையாட்டுகளை விளையாடலாம். முழுமையாக நம்பும்படி உங்கள் செயல்பாடுகள் இருந்தால் மட்டுமே, எந்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்துகொள்வர். 

பெற்றோராக அல்லாமல் நல்ல நண்பர்களாக இருக்கவேண்டும்.குழந்தைகளை 'ஆக்டிவ்' ஆக வைத்துக்கொள்வது எப்படி?ஆறு வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு, புத்தகங்களை சத்தமாக படித்து காண்பிக்க வேண்டும். 

ஆடியோ கதை போட்டு கேட்க வைக்கலாம். பெரிய குழந்தைகளை நாளிதழ் வாசிப்பு, படுக்கை சரிசெய்தல் போன்றவற்றை பழக்கலாம்.கொரோனா காலத்தில் தடுப்பூசி போடுவதை தள்ளி வைக்கலாமா?தடுப்பூசியை சரியான நேரத்தில் போட வேண்டும்

No comments