Breaking News

வீடுதேடி சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள்

வீடுதேடி சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள்

 கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன . இதையடுத்து தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது . ஆனால் கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி முறை என்பது எட்டாக்கனியாகவே உள்ளது .

 இதனால் மாணவர்களின் கற்றல் திறனில் தொய்வு ஏற்படாத வகையில் பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தி வருகின்றனர் . அந்த வகையில் , தேனி அருகே உப்புக்கோட்டையில் உள்ள பச்சையப்பா அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களும் , தங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி வருகின்றனர் .

வீடுதேடி சென்று மாணவர்கள் பாடம் நடத்துவதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் புவனேசுவரி தலைமையில் ஆசிரியர் குழு ஏற்படுத்தப்பட்டது . இதையடுத்து சுழற்சி முறையில் ஒவ்வொரு தெருக்களாக சென்று ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர் .

 பாடம் கற்பிக்கும் போது , மாணவர்களை சமூக இடைவெளி விட்டு அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர் . ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளன

No comments