Breaking News

நீட் தேர்வு குறித்து மத்திய அரசிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்த ராகுல்காந்தி

நீட் தேர்வு குறித்து மத்திய அரசிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்த ராகுல்காந்தி
    நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் குறித்து மாணவர்களின் மனதின் குரலை மத்திய அரசு கேட்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது டுவிற்றரில் பதிவிட்டுள்ள அவர், மாணவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை மத்திய அரசு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில் இன்னும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரவில்லை எனவும் இந்த சூழ்நிலையில் மாணவர்கள் தேர்வு எழுதச் செல்லவிருப்பதால் பெற்றோர்கள் மிகுந்த கவலையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளார்.

   இந்நிலையில் மத்திய அரசு இந்த நேரத்தில் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருற்று தொற்று தீவிரமாக அதிகரித்துவரும் நிலையில், நீட் தேர்வை நடத்தியே தீர வேண்டுமென மத்திய அரசு தீர்க்கமாக உள்ளது. இந்நிலையில், கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ஆம் திகதி நடைபெறும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜே.இ.இ. முதன்மை தேர்வும் திட்டமிட்டபடி செப்டம்பர் முதலாம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments