Breaking News

அக்.15 முதல் மீண்டும் பள்ளிகளை திறக்கும் மாநிலங்கள் இவை தான் தமிழகத்தில் எப்போது

அக்.15 முதல் மீண்டும் பள்ளிகளை திறக்கும் மாநிலங்கள் இவை தான் தமிழகத்தில் எப்போது
அக்டோபர் 15 முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க ஒரு சில மாநிலங்கள் முடிவு செய்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து, தற்போது இந்தியா 5-வது கட்ட அன்லாக்கில் நுழைந்துள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு பல தளர்வுகளை வழங்கியுள்ளது. அதன்படி, அக்டோபர் 15 (நாளை) முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க பல்வேறு மாநிலங்களும் அனுமதித்துள்ளன.

இருப்பினும், சில மாநிலங்கள் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து இன்னும் அக்கறை கொண்டுள்ளன. பெரிய சுகாதார அபாயத்தை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாக பள்ளிகளை திறப்பதற்கு ஒரு சில மாநில அரசுகள் தயக்கம் காட்டுகின்றன.

கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்திற்கு வெளியே அமைந்துள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளை அக்டோபர் 15 முதல் மீண்டும் திறக்கலாம் என்று மத்திய அரசு அன்லாக் வழிகாட்டுதல்களில் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஹரியானா, மேகாலயா போன்ற மாநிலங்கள் இன்னும் எந்த முடிவை எடுக்கவில்லை. டெல்லி, கர்நாடகா, சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள், பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளன.

பள்ளிகள் மீண்டும் திறப்பது குறித்து பல்வேறு மாநிலங்களின் முடிவுகள் :

உத்தரபிரதேசம் : அக்டோபர் 19 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்று உத்தரபிரதேச அரசு கடந்த 10-ம் தேதி அறிவித்தது.

பஞ்சாப் : அக்டோபர் 15 முதல் பள்ளிகள் திறக்க புதிய வழிகாட்டுதல்களை பஞ்சாப் அரசு வெளியிட்டுள்ளது. பஞ்சாப் அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, முதலில் 9 முதல் 12 வகுப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் ஒரு பிரிவுக்கு 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

டெல்லி : அக்டோபர் 31 க்கு முன்னர் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்று தேசிய தலைநகரம் முடிவு செய்துள்ளது. டெல்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சரும் ஏற்கனவே அனைத்து பள்ளிகளும் அக்டோபர் 31 வரை மூடப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு : தமிழகத்தை பொறுத்தவரை இப்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், பள்ளிகள் திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என்றும், பள்ளிகலை திறக்க இது சரியான நேரம் இல்லை எனவும் கூறினார்.

No comments