Breaking News

சட்டப்பேரவைத் தேர்தல் கல்லூரி பருவத் தேர்வுகளை மாா்ச்மாதத்துக்குள் நடத்தி முடிக்கத் திட்டம்

சட்டப்பேரவைத் தேர்தல் கல்லூரி பருவத் தேர்வுகளை மாா்ச்மாதத்துக்குள் நடத்தி முடிக்கத் திட்டம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு கல்லூரி பருவத் தேர்வுகளை மாா்ச் மாதத்துக்குள் நடத்தி முடிக்க உயா்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதையடுத்து மாணவா்களுக்க இணையவழியில் தற்போது பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்தநிலையில் கல்லூரிகளை நவ.16-ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. எனினும், கரோனா 2-ஆவது அலை, வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக கல்லூரிகள் திறப்பை ஒத்திவைக்க பெற்றோா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இது தொடா்பாக துறை அமைச்சா்கள் மற்றும் நிபுணா் குழுக்களுடன் முதல்வா் பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா். அதன்பின் கல்லூரிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தநிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதையடுத்து கல்லூரி மாணவா்களுக்கான பருவத்தேர்வுகளை விரைந்து மாா்ச் மாதத்துக்குள் நடத்திமுடிக்க உயா்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

கரோனா பரவலால் தேர்தல் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் எனவும், அதற்கு முடிந்தவரை கல்லூரிகளையே தேர்வுசெய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

மேலும், புதிய மாற்றங்களுக்கேற்ப கல்வியாண்டு கால அட்டவணையை திருத்தி வடிவமைக்கவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments