Breaking News

தமிழக பள்ளிகள் திறப்பு பற்றி நாளை முக்கிய முடிவு! கல்வி அமைச்சர் தகவல்

தமிழக பள்ளிகள் திறப்பு பற்றி நாளை முக்கிய முடிவு! கல்வி அமைச்சர் தகவல்
பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் வரும் 12-ம் தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் தீபாவளி பண்டிகைக்காகன ஊக்கத் தொகையை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களின் பெற்றோர்களிடம் நேற்று கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், 45% பெற்றோர்கள் மட்டுமே இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மீதிப் பேர் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் வரும் 12-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளோம். அதன் பிறகு இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

பள்ளிகள் திறப்பையொட்டி, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது என்றும், அரசுப் பள்ளி மாணவர்கள் 16,300 நீட் தேர்வுக்காகப் பயிற்சி பெற்று வருகின்றனர். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.

மேலும், மாணவர்களுக்கு இலவசச் சீருடைகள், புத்தகங்கள் மற்றும் காலணிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

No comments