Breaking News

பழைய பயண அட்டையை கொண்டு அரசு கல்லூரி மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் எம்டிசி அறிவிப்பு

பழைய பயண அட்டையை கொண்டு அரசு கல்லூரி மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் எம்டிசி அறிவிப்பு
பழைய பயண அட்டையை கொண்டு அரசு கல்லூரி மாணவர்கள் இலவசமாக மாநகர பேருந்துகளில் கல்லூரிகளுக்கு பயணிக்கலாம் என எம்டிசி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக எம்டிசி நிர்வாகம் அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 7ம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. 

அதன் அடிப்படையில் அரசு கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கும், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் இந்த கல்வியாண்டிற்கான புதிய இலவச பயண அட்டை அச்சடித்து, லேமினேஷன் செய்து வழங்குதலில் உள்ள கால அளவு போன்றவற்றினை கருத்தில் கொண்டு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாணவர்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

முதலாம் ஆண்டு அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் தாம் பயின்றுவரும் கல்லூரிகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தியும், அரசு கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள் 2019-20ம் ஆண்டு பெற்ற இலவச பயணஅட்டையை பயன்படுத்தி இலவசமாக கல்லூரி வரை பயணிக்க ஜனவரி 2021 வரை அனுமதிக்கலாம். 

எனவே இதுகுறித்து கிளை மேலாளர்கள் பணிமனை நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு உரிய வகையில் அறிவுறுத்த வேண்டும். எனவே, கல்லூரி மாணவர்கள் 2019-20ல் பெற்ற பயண அட்டையை காண்பித்தால் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments