தினமும் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் மாற்றத்தை பாருங்க
தினமும் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் மாற்றத்தை பாருங்க
உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன.
இந்த உலர் திராட்சையில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. உலர்
திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
திராட்சைப் பழ வகைகளிலேயே உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி
பெறப்படுவதுதான் இவை.
செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர்
பழங்களை உண்பதிலும் அதிக சுவையும், சத்துக்களும் காணப்படுகின்றன.
நாம் உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம்
என்று அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள்
நிறைந்துள்ளன.
திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி
பதப்படுத்துகின்றனர்.
இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது.
அப்படியே இருக்கும்.
கருப்பு திராட்சை விதைகளில் புரோ ஆன்தோ சயனிடின் 80 உள்ளது.
அதே போல் நாம் உண்ணுகின்ற மற்ற பழங்களிலும், காய்கறிகளிலும், தேநீரிலும் கூட
இச்சத்து உள்ளது. சத்துக் கிடைக்கும் அளவு மிகமிகக் குறைவாகும். திராட்சை
விதைகளின் சத்தில் எவ்விதமான பக்கவிளைவுகளும் கிடையாது.
சிறுநீரகத்தில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் அதைக் குணமாக்க ஆயுர்வேதம்
பரிந்துரைப்பது இந்த வழியில்தான்.
அது என்னவென்றால், இரவில் உறங்குவதற்கு முன் எட்டு அல்லது பத்து உலர் திராட்சை
நீரில் ஊறவிட்டு மறுநாள் காலையில் அதை நீருடன் உட்கொண்டால் சிறுநீரகப் பிரச்சனை
குறையும்.
மூலநோய் உள்ளவர்கள்
தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை
ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும்.
இரத்த விருத்திக்கு
எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது.
இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு
மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி
உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
உடல் வலி குணமாக
பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி
அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல்
நல்லது.
மாதவிடாய்க் கோளாறுகள் நீங்க
கருப்பு உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து
காலையில் அருந்தினால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் இதயநோய் தீரும்.