Breaking News

9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறைவெளியிட்ட தகவல்

9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறைவெளியிட்ட தகவல்
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் வீதம், முக கவசம், சமூக இடைவெளி போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க அரசு பரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார். 10 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது.

வாரத்தில் ஆறு நாட்கள் வகுப்புகள் நடைபெறுகிறது. மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்ற அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 1000 பேர் உள்ள பள்ளிகளில் 40 வகுப்புகளாக பிரிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. 10-ம் வகுப்புக்கு 20 வகுப்பறைகளும், 12-ம் வகுப்பிற்கு 20 வகுப்பறைகளும் தனித்தனியாக பிரித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர்கள் நெருக்கடி இல்லாமல் காற்றோட்ட கல்வி கற்க ஏதுவாக வகுப்பறைகள் பல கட்டிடங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் 9,11ஆம் வகுப்புகளுக்கு இப்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை. இதனால், கொரோனா முழுமையாக குறையும் வரை 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு குறைவு என தெரிவித்துள்ளார்.

No comments