Breaking News

பேருந்து போக்குவரத்து இயங்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு

பேருந்து போக்குவரத்து இயங்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைபரவல் குறைந்து வருகிறது. 11 மாவட்டங்களில் கொரோனா பிற மாவட்டங்களை விட அதிகமாக உள்ளதால், அந்த மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் குறைவாக வழங்கப்பட்டுள்ளது.


ஜூன் மாதம் 21 ஆம் தேதியுடன் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று காலை சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர், அதிகாரிகள், மருத்துவ நிபுணர் குழு, காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


இந்த ஆலோசனையில் மருத்துவ நிபுணர் குழு கொரோனா குறையாத 11 மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வுகள் வழங்க வேண்டாம் என்றும், பிற மாவட்டங்களில் வணிக வளாகங்கள், 50 விழுக்காடு பயணிகளுடன் பேருந்து பயண அனுமதி போன்றவற்றுக்கு பரிந்துரை செய்துள்ளது.


தமிழக அரசு ஜூன் மாதம் 28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டு இருக்கிறது. தளர்வுகளுடன் ஜூன் மாதம் 28 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இந்த ஊரடங்கில், மாவட்டங்களுக்குள் 50 விழுக்காடு பயணிகளுடன் பேருந்து சேவையை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வழிகாட்டு நெறிமுறையுடன் குளிர்பதன பேருந்துகளை குளிர்பதன வசதிகள் இல்லாமல் இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments