செப்டம்பர் 1 -ல் பள்ளிகளை திறந்தால் வகுப்புகளில் 50 விழுக்காடு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் - அமைச்சர் அன்பில் மகேஷ்
செப்டம்பர் 1 -ல் பள்ளிகளை திறந்தால் வகுப்புகளில் 50 விழுக்காடு மாணவர்கள்
அனுமதிக்கப்படுவர் - அமைச்சர் அன்பில் மகேஷ்
செப்டம்பர் ஒன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டால் ஒரு வகுப்பறையில் ஒரு நேரத்தில்
ஐம்பது விழுக்காடு மாணவர்களைக் கொண்டு சுழற்சி முறையில் கல்வி கற்பிக்கப்படும்
என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
சென்னையில் நூலகர் சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறந்த நூலகர்களுக்கு
விருதுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், வகுப்புகளை நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள்
விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு தொடர்ந்து பயிற்சி வழங்கப்பட்டு
வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.