தமிழகத்தில் ப்ளஸ் 2 துணை தேர்வுகள் தொடங்கின - கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற தேர்வுத்துறை அறிவுரை
தமிழகத்தில் ப்ளஸ் 2 துணை தேர்வுகள் தொடங்கின..! கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற தேர்வுத்துறை அறிவுரை
தமிழகத்தில் ப்ளஸ் 2 துணை தேர்வுகள் இன்று தொடங்கி, வரும் 19 ஆம் தேதி வரை
நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று மொழி பாடம் நடைபெறுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவில்
திருப்தியில்லாத, பள்ளிகளில் படித்த 25 மாணவர்கள் மற்றும் 45 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் தனிநபர்
இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்பாடு உள்ளிட்ட கொரோனா தடுப்பு
வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனதேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை சென்னை மயிலாப்பூரில் மத்திய
சென்னை மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட பி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில், சென்னை
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் அனிதா நேரில் ஆய்வு செய்தார்.