மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண்கள் கட்டாயமில்லை - தமிழக அரசு
மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண்கள் கட்டாயமில்லை - தமிழக அரசு
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண்கள் கட்டாயமில்லை
என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடப்பாண்டு இளநிலை பொறியியல் படிப்புக்கான இணையவழி விண்ணப்ப பதிவு
கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், பி.இ., பி.டெக் ஆகிய இளநிலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு
10, +2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியுடைய படிப்பில் இயற்பியல், வேதியியல்,
கணிதம் பாடங்களில் எடுத்த மதிப்பெண்களும், பொறியியல் தொழிற்கல்விப் பாடப்பிரிவில்
பயின்றவர்களுக்கு தொழிற்கல்வி கருத்தியல் மற்றும் செயல்முறைப் பாடங்களுடன்
தொடர்புப் பாடங்களாக இருக்கும் கணிதம், இயற்பியல் அல்லது வேதியியல் பாடங்களில்
எடுக்கப்பெற்ற மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என ஏற்கெனவே
அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண்கள்
கட்டாயமில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.