உதவி பேராசிரியர் நியமனத்திற்கு பிஎச்டி பட்டம் தேவையில்லை: 2023 ஜூலை வரை விலக்கு
உதவி பேராசிரியர் நியமனத்திற்கு பிஎச்டி பட்டம் தேவையில்லை: 2023 ஜூலை வரை விலக்கு
முனைவர் பட்டம் பெற்றால் மட்டுமே பல்கலைக் கழகங்களில் துணை பேராசிரியராக நேரடி நியமனம் செய்ய வேண்டும் என்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து பல்கலைக்கழக மானியக் குழு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
பல்கலைக் கழகங்களில் துணை பேராசிரியர் பணிக்கான நேரடி நியமனத்திற்கு முனைவர் பட்டம் அவசியம் என பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. உயர் கல்வியில் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டதாகவும், இந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா காரணமாக இந்த விதியில் திருத்தம் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதிக்கு பதிலாக 2023 ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும், இது தொடர்பான திருத்தம் அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.