Breaking News

முதல் உலக போர் நடைபெற்றதற்கான காரணம் இதுதானா?


     
    1914 ஆம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை நடைபெற்ற முதல் உலகப்போரில் முதன்முதலாக விமானங்கள் மற்றும் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. முதல் உலகப் போருக்குப் பின்னால் ஒரு வரலாறு உள்ளது. 1914 ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி ஆஸ்திரிய நாட்டின் பட்டத்து இளவரசர் பெர்டினாந்தும் அவரது மனைவியும் காரில் சென்று கொண்டிருக்கும் போது செர்பிய நாட்டைச் சேர்ந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதன் காரணமாக செர்பியா மீது ஆஸ்திரியா போர் தொடுத்தது. ஜெர்மனி, ஆஸ்திரியா நாட்டுக்கு ஆதரவாகப் போரில் இறங்கியது பின்பு இவற்றுடன் ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா நாடுகளும் சேர்ந்து கொண்டன. செர்பியா நாட்டிற்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் சேர்ந்து கொண்டன. இதனால் இது உலகப் போர் ஆக மாறியது. 

      1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி இது உலகப்போராக உருவெடுத்தது. அமெரிக்கா முதலில் கலந்து கொள்ளாமல் பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளுக்கு உதவியாக இருந்தது. இதனால் கோபமடைந்த ஜெர்மனி, அமெரிக்கா கப்பல்களை குண்டு வீசி அளித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, ஜெர்மனிக்கு எதிராக போரில் கலந்து கொண்டது. இரு தரப்பு நாடுகளுக்கு இடையே கடுமையான போர் ஏற்பட்டது. ஜெர்மனி விமானங்கள் நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்துக்கொண்டு மற்ற நாடுகளுக்கு அதிக சேதத்தை விளைவித்தது. இந்த போரில் அதிக அளவில் டாங்கிகள பயன்படுத்தப்பட்டன. இந்நேரத்தில் ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டு லெனின் தலைமையில் முதல் கம்யூனிச அரசு அமைந்தது. ஜெர்மனியுடன் லெனின் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு போரில் இருந்து விலகியது. 

      ஜெர்மன் ராணுவம் மிகவும் மோசமான ஆயுதங்களைப் பயன்படுத்தியது. நச்சுப் புகையை கொண்டு எதிர் நாட்டு படை வீரர்களை அழைத்து வந்தது ஜெர்மன் வீரர்கள் முகமூடி அணிந்து இருப்பார்கள். பின்பு குதிரை வண்டிகளின் பின்னால் நச்சு வாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்களை கொண்டு வருவார்கள். எதிரிகள் நெருங்கியதும் சிலிண்டர்களில் உள்ள நச்சுப்புகையை திறந்து விடுவார்கள் பின்பு எதிரி படையினர் மயங்கி விழுந்து மரணத்தை தழுவுவார்கள். போர் விதிமுறைப்படி நச்சுவாயு பயன்படுத்தக்கூடாது என அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டன. ஆனால் அதையும் மீறி ஜெர்மன் நச்சுப்புகையை பயன்படுத்தியது. இதனால் ஜெர்மன் பல வெற்றிகளை பெற்றது. பின்பு பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜெர்மனியை குறி வைத்தன. இதனால் ஜெர்மன் மக்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதி தங்கள் மன்னர்களுக்கு எதிராக புரட்சி செய்தனர். இதனால் தனது மக்களையே சுட்டுக்கொள்ள கெய்சர் தனது ராணுவத்தை ஏவினார். இதில் மக்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
   
      ஜெர்மனிக்கு எதிராக முன்னேறிக் கொண்டிருந்த படைகள் 1918ம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி பெர்லின் நகருக்குள் நுழைந்தது. ஜெர்மன் படையினரால் இந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் சிறிது நேரத்தில் சரண் அடைந்தது. ஜெர்மனி மன்னர் தனது பதவியை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்புக் கொடுத்துவிட்டு நாட்டைவிட்டே வெளியேறினார். 1561 நாட்கள் நடைபெற்ற இந்த போரில் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். பின்பு ஏற்பட்ட விஷக்காய்ச்சலால் கோடிக்கணக்கான மக்கள் இறந்தனர். இதனால் ஜெர்மனியின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது.

    பின்பு 1919 ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி சேதத்தை ஏற்படுத்திய ஜெர்மனி அனைத்து நாடுகளுக்கும் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆஸ்திரியா நாடு பின்பு பல துண்டுகளாக பிரிக்கப்பட்டது. புதிய நாடுகளாக யூகோஸ்லேவியா, போலந்து, செகோஸ்லோவிக்கியா உருவானது. பின்பு இப்படி உலகப்போர் ஏற்படாமல் இருக்க ‘சர்வதேச சங்கம்’ ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா மட்டும் இந்த சங்கத்தில் சேரவில்லை. 

தொகுப்பு : தினத்தந்தி வரலாற்று சுவடுகள்.







No comments