Breaking News

NEET தேர்விற்கு இன்று முதல் டிச.,31 ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

      இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம் இன்று முதல் துவங்குகிறது. டிச.,31 ம் தேதி வரை ஆன்லைனிலும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அரசு ஒதுக்கீட்டிலும், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டிலும், நீட் தேர்வு அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.நடப்பு கல்வி ஆண்டுக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 3ல் நடக்கிறது.

    இதற்கான, 'ஆன்லைன்' பதிவு இன்று துவங்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய தேர்வு முகமையின் முந்தைய அறிவிப்பில், இந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, நீட் தேர்வுக்கான விபரங்கள் இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப் படுகிறது. எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அரசு ஒதுக்கீட்டிலும், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டிலும், நீட் தேர்வு அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.நடப்பு கல்வி ஆண்டுக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 3ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' பதிவு இன்று துவங்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய தேர்வு முகமையின் முந்தைய அறிவிப்பில், இந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, நீட் தேர்வுக்கான விபரங்கள் இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப் படுகிறது.


No comments