Breaking News

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு தொலைதூரத்தில் மையங்கள் அமைத்தது ஏன்? ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்.

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு தொலைதூரத்தில் மையங்கள் அமைத்தது ஏன்? ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்!


   2018-19-ம் ஆண்டுக்கான வட்டார கல்வி அலுவலர் பணிகளில் காலியாக உள்ள 97 இடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதற்கான கணினி வழித் தேர்வு இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 16-ந்தேதி (நாளை மறுதினம்) வரை நடைபெற இருக்கிறது. 57 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு மையங்கள் தாங்கள் தேர்வு செய்திருந்த விருப்ப இடங்களை தவிர்த்து தொலைதூரத்தில் மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது.அதிலும் ஆண் தேர்வர்களுக்குதான் இப்படி தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.


   இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:- முறைகேடுகள் நடைபெறுவதைத் தவிர்க்கும் வகையிலும், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற வகையிலும் வெளிமாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகளை போல், ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளிலும் முறைகேடுகள் நடக்கக்கூடாது என்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் உறுதியாக இருக்கிறது.தேர்வர்களுக்கு மட்டுமல்லாது தேர்வு பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கும் வெவ்வேறு இடங்களில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதில் பெண் தேர்வர்களுக்கு மட்டும் அவரவர் விருப்ப பட்டியலை பொறுத்து மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



No comments