Breaking News

100% பொடுகு நீங்க எளிய வழிகள்..

100% பொடுகு நீங்க எளிய வழிகள்..
தலையில் பொடுகு வர காரணம் நிறைய உண்டு. அதாவது தலை குளித்துவிட்டு தலையை நன்கு துவட்டாமல் இருப்பது, தலையை எண்ணெய் பசையுடன் அழுக்காக வைத்திருப்பது, அடிக்கடி அதிகளவு கெமிக்கல் நிறைந்த ஷாம்புக்களை பயன்படுத்துவது, பொடுகு பிரச்சனை உள்ளவர்களின் சீப்பினை நாமும் பயன்படுத்துவது, தலையை எப்பொழுதும் வறட்சியாக வைத்திருப்பது என பொடுகு வர காரணம் என்று சொல்லலாம். இந்த பொடுகு பிரச்சனையானது நீண்ட நாட்கள் இருந்தால் தலைமுடியானது உதிர ஆரம்பிக்கும்.சரி இந்த பொடுகு நீங்க எளிய முறைகள் (dandruff tips at home) என்னென்ன உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

பொடுகு நீங்க பாட்டி வைத்தியம் 1

இந்த பொடுகு தொல்லையில் இருந்து விடுபட பசும்பாலுடன் சிறிதளவு மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து தலைமுடியின் வேர் பகுதி மற்றும் பொடுகு அதிகம் உள்ள இடங்களில் நன்றாக அப்ளை செய்யவும். தலையில் அப்ளை செய்தவுடன் 1/2 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். பின் சிகைக்காய் போட்டு தலை முடியை அலசி வர பொடுகு நீங்கி தலைமுடி நன்கு வளர ஆரம்பிக்கும்.

பொடுகு நீங்க பாட்டி வைத்தியம் 2

பொடுகு தொல்லை நீங்க இது ஒரு சிறந்த வழிமுறை ஆகும். அதாவது வேப்பிலை கொழுந்துடன் சிறிதளவு துளசி இலையினை சேர்த்து நன்கு அரைத்து, அவற்றை சாறுபிழிந்து தலைமுடியில் நன்கு அப்ளை செய்ய வேண்டும்.பின் சிறிது நேரம் கழித்து தலைமுடியை குளிர்ந்த நீரால் நன்கு அலச வேண்டும். இவ்வாறு செய்வதினால் மிக விரைவிலேயே பொடுகு தொல்லை நீங்கி, தலைமுடி நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

பொடுகு நீங்க பாட்டி வைத்தியம் 3

மூன்று அருகம்புல் ஒரு கையளவு எடுத்து நன்றாக பொடிதாக நறுக்கி, மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்து அவற்றின் சாற்றினை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இந்த சாற்றினை சுத்தமான தேங்காய் எண்ணெயில் சேர்த்து நன்கு காய்ச்சி பின் ஆறவைத்து, இந்த எண்ணெயை தினசரி தலைமுடிக்கு தேய்த்து வர பொடுகு தொல்லை நீங்கும்.

பொடுகு நீங்க பாட்டி வைத்தியம்  4

நன்கு காய்ந்த வேப்பம்பூவை 50 கிராம் எடுத்து அவற்றை நன்கு பொடி செய்து, 100 கிராம் தேங்காய் எண்ணெயில் சேர்த்து நன்கு காய்ச்சி பின் ஆறவைத்து, பின் இந்த எண்ணெயை தலைமுடியில் அப்ளை செய்து, 1/2 மணி நேரம் கழித்து தலை அலச வேண்டும்.

பொடுகு நீங்க பாட்டி வைத்தியம்  5

வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் சிறிதளவு மிளகையும் சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊறவைத்து பின்பு தலை அலச வேண்டும். இவ்வாறு செய்வதினால் பொடுகு தொல்லை நீங்கி, தலைமுடி வளர ஆரம்பிக்கும்.

மேல் கூறப்பட்டுள்ள பாட்டி வைத்தியம் குறிப்புகளில் ஏதேனும் ஒரு குறிப்பினை தொடர்ந்து பின்பற்றி வர பொடுகு நீங்க ஆரம்பிக்கும். அது மட்டும் இல்லாமல் தலை முடியும் நன்கு வளர ஆரம்பிக்கும்.

No comments