Breaking News

கல்வியியல் கல்லுாரியில் சேர 10க்குள் விண்ணப்பிக்கலாம்

கல்வியியல் கல்லுாரியில் சேர 10க்குள் விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து மாநில கூட்டுறவு ஒன்றிய நிர்வாகி சரோஜினி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி மாநில கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் 2020-21ம் ஆண்டிற்கான B.Ed., (இரண்டு ஆண்டு) இளங்கலை பட்டப் படிப்பில் சேர மாணவ, மாணவியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் நேற்று(24ம் தேதி) முதல் வரும் 7ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வழங்கப்படுகிறது.விண்ணப்பத்தினை நேரில் பெற விருப்புவோர் ரூ.400 (அஞ்சல் வழி ரூ.450) பணமாக செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 10ம் தேதி மாலை 5:00 மணிக்குள் புதுச்சேரி, சுய்ப்ரேன் வீதியில் உள்ள புதுச்சேரி மாநில கூட்டுறவு ஒன்றியத்திற்கு வந்து சேர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments