Breaking News

ஆகஸ்டு 3வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்

ஆகஸ்டு 3வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்
கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது . மாநில தலைவர் இளமாறன் தலைமை தாங்கினார் . பொருளாளர் ஜி.சாந்தி வர வேற்புரையாற்றினார் .

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள் வருமாறு :

மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி வழி பாடங்களை ஒளிபரப்பும் முறையை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது .

ஆசிரியர் மாணவர் நேரடி கற்றல் , கற்பித்தல் நிகழ்தல்தான் முறையான கல்வியும் , மாணவர்களின் ஒழுக்கத்தையும் மேம்படுத்தமுடியும் என்பதால் தொற்று பாதிக்கப்படாத கிராமப்புறப் பகுதிகளில் ஆகஸ்டு 3 - வது வாரத்தில் பள்ளி திறந்து , சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட அனுமதிக்கலாம் .

அதேபோல் ஆசிரியர்களையும் கழற்சிமுறையில் பயன்படுத்தலாம் . * கொரோனா தொற்று காரணத்தினால் இந்த ஆண்டு 40 சதவீதம் பாடத்திட்டதை குறைக்க அரசு ஆவணம் செய்யவேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

No comments