Breaking News

இலவச முகக்கவசம் வழங்க நாளை முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம் தமிழக அரசு அறிவிப்பு

இலவச முகக்கவசம் வழங்க நாளை முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம் தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு அறிவித்த முகக்கசவம் வழங்குவதற்காக, நாளை முதல் வீடு வீடாக ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்குவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. முகக்கவசம் வாங்க பணம் இல்லாததால் ஏழை, நடுத்தர மக்கள் முகக்கவசம் இல்லாமல் வெளியே வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தமிழக அரசு சென்னை மாநகராட்சி தவிர மற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் வாழும் அடித்தட்டு மக்களுக்கு இலவசமாக மறுமுறை உபயோகிக்கும் வகையிலான முகக்கசவம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கடந்த 27ம் தேதி தொடங்கி வைத்தார்.

அதன்படி, வருகிற 5ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ஒருவருக்கு 2 முகக்கசவம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக, வருகிற 1ம் தேதி (நாளை) மற்றும் 3, 4 ஆகிய தேதிகளில் வீடு வீடாக ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்குவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. டோக்கனில் குறிப்பிட்ட தேதிகளில், குடும்ப அட்டையை ரேஷன் கடையில் காட்டி இலவச முகக்கசவங்களை வருகிற 5ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். வருகிற 7ம் தேதி (வெள்ளி) ரேஷன் கடை ஊழியர்களுக்கு வாராந்திர விடுமுறை தினமாகும். ஆனால், அன்றைய தினம் நியாய விலை கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடான விடுமுறை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் சஜ்ஜன் சிங் ரா சவான் தெரிவித்துள்ளார்.

No comments