Breaking News

அரசு ஊழியர்கள் வருமான வரி சார்ந்த வினா மற்றும் பதில்

அரசு ஊழியர்கள் வருமான வரி சார்ந்த வினா மற்றும் பதில்
1.அரசு ஊழியர் வருமான வரியை தனது சம்பளத்திலிருந்து மட்டுமே கட்ட வேண்டுமா❓

✍️ஆம், அரசு ஊழியர்கள் தாங்கள் செலுத்தும் வருமான வரியை தனது சம்பளத்திலிருந்து மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும் தனியாக வங்கியிலோ அல்லது வேறு வழியிலோ தனது சொந்த கணக்கு எண்ணில் கட்ட எவரும் நிர்ப்பந்திக்கக் கூடாது.

2.அரசு ஊழியர் தனது வருமான வரியை அந்த வருடத்தின் கடைசியில் மொத்தமாக சம்பளத்தில் பிடித்தம் செய்ய இயலுமா❓

✍️அரசு ஊழியர் தனது வருமான வரியை முதல் காலாண்டில் ஒரு சராசரி உத்தேச மதிப்பீடு செய்து தனது வரியை கட்டாயம் பிரதி மாதம் சராசரி எண்ணிக்கையில் மற்றும் தொகையை பிடித்தம் செய்தல் வேண்டும்.

3.அரசு அதிகாரி சம்பளம் பெற்று வழங்குபவர் தங்களுக்கு படிவம் 16 கண்டிப்பாக வழங்க வேண்டுமா❓

✍️தங்களால் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் தொகை அரசு அலுவலக அதிகாரி மூலம் டிடிஎஸ் (TDS) பதிவுசெய்து அரசு ஊழியருக்கு படிவம் 16 (form 16) கண்டிப்பாக தருதல் வேண்டும். இந்த நடைமுறை அரசு குறிப்பேடுகளிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.அரசு அதிகாரி மற்றும் சம்பளம் பெற்று வழங்குபவர் தங்களுக்கு படிவம் 16 கொடுக்காத போது தங்களால் செய்யப்படுகின்ற வரி தாக்கல் சரியாக வருமா❓

✍️அப்படி அரசு அதிகாரி படிவம் 16 கொடுக்காமல் இருக்கும்பொழுது தங்களால் செய்யப்படுகின்ற வருமானவரி தாக்கல் ஆனது தவறானது என்று வருமான வரித் துறையால் கருதப்பட்டு தங்களுக்கு விளக்க கடிதம் வழங்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எனவே அரசு அறிவித்துள்ள குறிப்புகளின்படி சம்பளம் வழங்கக் கூடிய அதிகாரி தங்களுக்கு படிவம் 16 குறிப்பிட்ட கால அளவிற்குள் வழங்கப்பட வேண்டும்.

படிவம் 16 பெற்றுக்கொண்ட பணியாளர் படிவம் 16 சரிபார்த்து பெற்றுக் கொள்ளுதல் அவசியம். தரப்பட்ட படிவத்தை வைத்து வரி தாக்கல் குறிப்பிட்ட கால அளவிற்குள் செய்து முடித்தல் கட்டாயமாக்கப்படுகிறது.

5.அரசு அதிகாரி மற்றும் சம்பளம் வழங்குபவர் தங்களுக்கு படிவம் 16 வழங்கிய பின்பு தாங்கள் வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்❓

✍️படிவம் 16 தரப்பட்டு அல்லது அதிகாரிகள் தங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருக்கும் பொழுது தாங்களே அதை சம்பந்தப்பட்ட வரி கணக்காளர் ( AUDITOR ) மூலம் பதிவு செய்து தங்கள் கணக்கீட்டை முடித்துக் கொள்ளுதல் அவசியமாகும்.

கடந்த ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்யாத போது தற்போது தாங்கள் தாக்கல் செய்ய முற்பட்டால் அதற்கான தண்டத்தொகை வரி அல்லது உங்களிடம் வசூலிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ஆனால் சில காலகட்டங்களில் வருமான வரித் துறையால் அனுமதிக்கப்படும் போது மட்டும் எந்தவித தடையும் இல்லாமல் தங்கள் வருமான வரி தாக்கல் செய்ய இயலும்

No comments