Breaking News

ஆன்லைன் க்ளாஸ் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கவனத்திற்கு

ஆன்லைன் க்ளாஸ் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கவனத்திற்கு
    இன்றைய காலகட்டத்தில் ஊரடங்கு காரணமாக, குழந்தைகள் அனைவரும் ஆன்லைனில் பாடம் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் செல்போனை பயன்படுத்தும் பொழுது, சில தேவையற்ற அடல்ட் Content-களை அவர்கள் காண நேரலாம். மேலும்,
இனி, நம் குழந்தைகள் அனைவரும் 1, 6, 9, 11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக 'smartphones' பயன்பாடு அதிகரிக்கும். அத்துடன், 'cam scanner, Diksa, Mx Videoplayer, Es file manager' போன்ற Android Apps மற்றும் 'You tube'யும் பயன்படுத்த தேவை ஏற்படும்.

     அவ்வாறு பயன்படுத்தும் போது, அடிக்கடி இடையிடையே சில முகம் சுளிக்கும் விளம்பரங்களும் வரலாம். எனவே, முன்னெச்சரிக்கையாக நமது ஸ்மார்ட் போனில் 'Play store Settingsல் 'Parent control' option ஐ 'on' செய்யவும். அதன் கீழே உள்ள 'Apps and Games' ஐ கிளிக் செய்து '12+'ல் டிக் செய்யவும். அடுத்ததாக ' Films' ஐ கிளிக் செய்து 'U' என்பதை டிக் செய்யவும்.

      அதேபோல்,'YOU TUBE' settings ல் generalல்' Restriction mode 'ஐ 'On' செய்யவும். இப்போது, நம் குழந்தைகளின் smartphone ல், தேவையற்ற விளம்பரம், Video குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

No comments