Breaking News

நத்தம் புறம்போக்கு நிலம் என்றால் என்ன? கிராம நத்தத்திற்கும், நத்தம் புறம்போக்குக்கும் என்ன வித்தியாசம்?

நத்தம் நத்தம் நிலம் என்றால் என்ன? கிராம நத்தத்திற்கும், நத்தம் புறம்போக்குக்கும் என்ன வித்தியாசம்?
நத்தம் புறம்போக்கு நிலம் என்றால் என்ன?

கிராம நத்தம்

நிலம் தொடர்பான தொன்றுதொட்டே வரும் வழக்கு மொழிகள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரிவதில்லை. அவர்களுக்காகத்தான் இந்த/

பதிவு. கிராம நத்தம் என்றால் என்ன என்பதைபறி விரிவான சட்ட‍ விளக்கத்துடன் காண்போம்.

அதென்ன கிராம நத்தம்?

நத்தம் என்றால் குடியிருப்பு பகுதி எனப் பெயர். கிராம நத்தம் என்றால் கிராமத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதி. அவ்வளவு தான்.

நத்தம் புறம்போக்கு என்றால் என்ன?

குடியிருப்பு பகுதியில் இருக்கும் புறம்போக்கு என்று பெயர்.

சாதாரண புறம்போக்குக்கும், நத்தம் புறம்போக்குக்கும் என்ன வித்தியாசம்?

சாதாரண புறம்போக்கு என்றால் அரசுக்கு என்றாவது பயன்படும் நிலமாகவும் ஆனால் மக்களுக்கு குடியிருப்புக்கு பயன்படாத நிலமாகவும் இருக்கும். அதாவது ஏரி, ஆறு, கிணற்று பகுதிகள் போன்றவையை சொல்லலாம்.

கிராம நத்தத்திற்கும், நத்தம் புறம்போக்குக்கும் என்ன வித்தியாசம்?

கிராம நத்தமோ அல்லது நத்தம் புறம்போக்கோ எல்லாம் ஒன்றுதான். மக்கள் குடியிருக்க ஏதுவான இடம் என்றுதான் அர்த்தம். இந்த மாதிரியான நத்தம் நிலங்க ளில் பட்டா நீங்கள் வாங்கி விட்டால், அந்த நிலம் உங்களுக்கே சொந்தமாகிறது. பட்டா இல்லை என்றால் நாளைக்கு அந்த நிலம் அரசுக்கு தேவையானால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் உங்களை காலி செய்யும் அதிகாரம் அரசுக்கு உண்டு.

நத்தம் புறம்போக்கில் வீடு கட்டி குடியிருக்கலாமா?

நத்தம் புறம்போக்கு பகுதியில் தான் லட்சகணக்கான நபர்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த நத்தம் விவரங்களை 2015 ம் ஆண்டு அரசு கணினி மயமாக்க முடிவு செய்தது. அதற்காக ரூ. 70,00,000/- ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நத்தம் நிலம் மொத்தமாக எவ்வளவு இடங்கள் உள்ளன என்ற விவரங்கள் அரசு கட்டுப்பா ட்டுக்குள் வந்தாலும் இன்னும் கணினி மயமாக்கவில்லை. அதனை அரசு கணக்கெ டுத்தால் தான் நத்தம் நிலத்தில் வீடுகள் எவ்வளவு உள்ளது என்கிற புள்ளி விவரங்கள் வந்து சேரும்.

30.10.1987 முதல் 1.1.1988 வரை நத்தம் நில அளவைப் பணி நடைபெற்றது. (அரசாணை நிலை எண் – 1177,வணிகவரித்துறை மற்றும் அறநிலையத்துறை)

அரசாணை எண் – 1971, வருவாய்த்துறை (எஸ். எஸ். 2), நாள் – 14.10.1988 – ல் அங்கீ கரிக்கப்பட்டுள்ள நத்தம் நிலவரித் திட்ட அறிக்கையின்படி (அதாவது யூ. டி. ஆர் காலம் 1987 ல் முடிவடைகிறது. நத்தம் காலம் 1988 ல் தொடங்குகிறது) கிராம புறங்களில் நத்தம் மனைக்கட்டு பகுதிகளுக்கும், வேளாண்மை நிலங்கள் அல்லாத பிற காரியங்களுக்கு பயன்படுத்தப்படுபவைகளுக்கும், மனைவரி விதிக்க வழி வகை செய்யப்பட்டது. 1988 வரை நத்தம் பகுதிகளுக்கு யாருடைய அனுபவத்தில் எவ்வளவு விஸ்தீரணம் உள்ளது என்பதற்கோ நத்தத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிவதற்கோ எவ்வித கணக்குகளும் பராமரிக்கப்படாமல் இருந்தது.

நத்தம் நிலவரித் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொருவருடைய அனுபவ த்திலும் உள்ள நத்தம் பகுதி தனித்தனியாக உட்பிரிவுகள் செய்யப்பட்டு நத்தத்தில் உள்ள பல்வேறு புறம்போக்குகளையும் அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் கண்டறிந்து அதன்மீது தக்க மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மேலும் பொது உபயோகத்தில் உள்ள புறம்போக்கு பகுதிகளில் உள்ள பயன்தரும் மரங்களும் கணக்கிடப்பட்டு, அவை மரவரி விதிப்பின்றி இருக்குமானால், இத்த கைய இனங்களை பட்டியலிட்டு வருவாய் வட்டாட்சியருக்கு மேல் நடவடிக்கை க்காக அனுப்பப்பட்டன.

இத்திட்டத்தின் படி தோராய பட்டா ஒவ்வொரு நபருக்கும் தயாரிக்கப்பட்டு அவர்க ளிடம் சார்பு செய்யப்பட்டு, அதன் மீது ஆட்சேபனைகள் ஏதும் வரப்பெற்றால், விசார ணை நடத்தி தக்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. இத்திட்டத்தினால் நத்தத்தில் ஒவ்வொருவருடைய அனுபவத்தில் உள்ள இடமும் வரையறை செய்யப்பட்டது. பொது உபயோகத்தில் உள்ள இடங்களும் தனித்தனியே உட்பிரிவுகள் செய்யப்பட்ட ன.

இதனால் நத்தத்தில் ஏற்படும் எல்லை பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும், பொது உபயோகத்தில் உள்ள செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து மேல் நடவ டிக்கை எடுக்கவும் வசதியாக இருந்தது. நத்தத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் அவர வர்களின் அனுபவத்தில் உள்ள விஸ்தீரணங்கள் நிர்ணயிக்கப்படுவதால் அதன் அடிப்படையில் வீட்டுவரி, மற்றும் மனைவரி வசூல் செய்ய மிகவும் உப யோகமாக இருந்தது. (அரசாணை நிலை எண் – 454,வருவாய்த்துறை, நாள் – 13.5.1996 ன்படி, மனைவரி தள்ளுபடி செய்யப்பட்டது.

No comments