Breaking News

CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது -தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு




         நடப்பாண்டில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 18,85,885 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் 18,73,015 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று நண்பகல் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 91.46 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 17,13,121 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். குறிப்பாக மாணவர்களை விட மாணவிகள் 3.17 சதவீதம் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பாண்டில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி 0.36 சதவீதம் அதிகரித்துள்ளது.



       1.84 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 41,000 மாணவர்கள் 95 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர்.

        தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் சிபிஎஸ்இ தலைவர் மனோஜ் அஹுஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்றும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். எஸ்.எம்.எஸ் மூலமாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.



       அதாவது ”CBSE10” ஸ்பேஸ் விட்டு ”பதிவு எண்” ஸ்பேஸ் விட்டு ”அட்மின் கார்டு ஐடி” டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். மேலும் Digilocker மற்றும் UMANG மொபைல் ஆப்கள் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

        ஒரே நேரத்தில் அதிகப்படியான மாணவர்கள் சிபிஎஸ்இ இணையதளத்தை அணுகியதால் பலரால் தேர்வு முடிவுகளை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments