Breaking News

CBSE 12ஆம் வகுப்பு தேர்வில் 88.78% பேர் தேர்ச்சி

       சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப் பட்டன. இதில் 88.78 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 5.38 சதவீதம் அதிகரித்துள்ளது.


   மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை கடந்த பிப்ர வரி, மார்ச் மாதங்களில் நடத்தி யது. இதில், 11 லட்சத்து 92,961 மாணவ, மாணவிகள் எழுதினர். கரோனா வைரஸ் தொற்று காரண மாக தேர்வுகள் முழுமையாக நடத் தப்படவில்லை. இதைத் தொடர்ந்து நடத்த இயலாத தேர்வுக ளுக்கு முந்தைய தேர்வுகள் மற்றும் அக மதிப்பீடு அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்தது.


    இந்நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று இணையதளத்தில் (www.cbse.nic.in) வெளியிடப்பட்டன. இதில், 10 லட்சத்து 5,980 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 88.78 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 5.38 சதவீதம் அதிகரித்துள்ளது.


        மாணவர்களின் தேர்ச்சி 86.19 சதவீதமாகவும் மாணவிகளின் தேர்ச்சி 92.15 சதவீதமாகவும் உள் ளது. மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளின் தேர்ச்சி 5.96 சதவீதம் அதிகம் ஆகும்.


     சிபிஎஸ்இ நிர்வாகத்தின் கீழ் உள்ள 16 மண்டலங்களில் திருவ னந்தபுரம் மண்டலம் 97.67 % தேர்ச்சி பெற்று முதலிடத்தையும் பெங்க ளுரு மண்டலம் 2-ம் இடத்தையும் (97.05 %) பிடித்துள்ளன.

No comments