Breaking News

பள்ளிக் கல்வி Fit India Movement விடுபட்ட பள்ளிகள் 25.07.2020க்குள் இணையதளத்தில் பதிவு செய்து தற்போதைய நடவடிக்கைகளை உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்

பள்ளிக் கல்வி Fit India Movement விடுபட்ட பள்ளிகள் 25.07.2020க்குள் இணையதளத்தில் பதிவு செய்து தற்போதைய நடவடிக்கைகளை உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்
Click Here to Download
  மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் Fit India Movement சார்பாக www.fitindia.gov.in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டு , மேற்கண்ட இணையதள முகவரியில் இப்பொருள் சார்பாக அனைத்து பள்ளிகளும் Fit India School Certificate , Fit India Flag , Schools with either 3 Star or 5 Star Rating போன்ற விவரங்களை உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 இதனைத் தொடர்ந்து , உள்ளீடு செய்வதற்குண்டான விவரங்களின் வழிமுறைகளும் அதன் பொருட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு 24.01.2020 நாளிட்ட கடிதத்தில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் , நாளது வரை குறைந்த அளவிலான பள்ளிகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருப்பது ஏற்புடையது அல்ல.எனவே இதுவரை மேற்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் , உடன் பதிவேற்றம் செய்திடும் பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இப்பணி குறித்து அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் 25.07.2020 - க்குள் பதிவு செய்துள்ளதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 மேலும் , இது சார்ந்து , அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தமைக்கு உடன் ஒப்புதல் கடிதம் அளிக்குமாறும் , அனைத்துப் பள்ளிகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததை உறுதி செய்து அதன் அறிக்கையினை 25.07.2020 அன்று மாலை 3 மணிக்குள் இவ்வியக்கக மின்னஞ்சல் முகவரிக்கு ( jdnsed@nic.in ) அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments